புதன், 3 மே, 2017

புதன் 170503 சிறுசும் பெருசும்


போன வாரத்திற்கு முந்தைய வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளைக் கூறிவிட்டீர்கள். மிடில் கிளாஸ் மாதவி இனிமே புதிர் கேள்விகளுக்கு, தனக்கு பதில் தெரியும் என்று மட்டும் கூறிவிட்டு, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். 

எங்கள் சக ஆசிரியர்கள் கூட, என்னிடம், என்னப்பா இது, மி கி மா தேர்ந்தெடுத்த கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறாயா என்று கேட்கிறார்கள். (ஆனா இந்த வாரம் கதை வேறு! மி கி மா அநேகமாக ஃபெயில்தான்!)  


# பாலிருக்கும் , பழமிருக்கும், பசியிருக்காது  

# நாற்காலி(வார்த்தை)க்கு இரண்டு கால் 

# வை கோ (பாலகிருஷ்ணன்) 

ஆகியவை சரியான விடைகள். 
====================================
இனி, இந்த வாரக் கேள்வி: 




நான், ஸ்ரீராம், கேஜி  ஆகியோர் வங்கிக்குச் சென்றோம். ஒரே கூட்டம். ஆளுக்கு ஒரு செக் வைத்திருந்தோம். மூவரும் வரிசையில் நின்று, செக் சமர்ப்பித்தோம். 
     

எங்களுக்கு, டோக்கன் எண்  2 , 3, 4 கிடைத்தன. கவுண்டரில் இருந்தவரிடம்  'சின்ன எண் டோக்கன்களாக   இருக்கின்றனவே! பணம் உடனே கிடைக்குமா? ' என்று கேட்டேன். அதற்கு அவர், "சார்  இப்போ டோக்கன் எண் இருபத்தெட்டு போய்கிட்டு இருக்கு. நூறு வரை முடிந்ததும், ஒண்ணு, அதுக்கு அப்புறம் உங்க டோக்கன்கள்" என்றார். நிச்சயம் இரண்டுமணி நேரம் ஆகும்.  

கே ஜி அவருடைய பையிலிருந்து, ஒரு சாக் பீஸ் துண்டு எடுத்தார். 

இந்த மூன்று டோக்கன்களையும் பயன்படுத்தவேண்டும். 

சாக் பீசால், நடுவில் என்ன குறியீடு வேண்டுமானாலும்  எழுதிக்கொள்ளலாம். 

விடை, 1, 2, 3, 4, 5, 6 ....................................  N வரை வரவேண்டும். 


Example :  

(3 + 2) - 4   is equal to 1

....

4 + 3 + 2  is equal to 9 ...  

என்று புதிர் போட்டார். 

நான் நிறைய அமைப்புகள் செய்து, பல எண்கள் வருமாறு அமைத்தேன். 

நீங்களும் முயற்சி செய்யுங்கள். 

You can draw square root, exponent, division, plus, minus etc but can use 2, 3 and 4 only. All the three numbers are to be used in the equation. All the three numbers can be used only once. 

Start Music! 


Question 2: 

Using the same numbers and symbols, what is the minimum number you can get?


Question 3: 

Using the same numbers and symbols, what is the biggest number you can get? 


நம்பர்கள் என்றால் அலர்ஜி என்று சொல்பவர்கள், இந்த எழுத்துகளை புனரமைப்பு செய்து, நமக்குத் தெரிந்த ஒருவரைக் கண்டுபிடியுங்கள்! 

தமில்  விஸ்கி மாளாடி 



    

30 கருத்துகள்:

  1. நானெல்லாம் பாரதியார் வம்சம்! கணக்கு மணக்கு எனக்கு ஆமணக்கு! :)

    பதிலளிநீக்கு
  2. அது சரி, பாங்கில் டோக்கன் வாங்கற கவுன்டர் தனியாத் தானே இருக்கும். அங்கே போய் டோக்கன் வாங்கிட்டு அப்புறமா பணம் வாங்கறச்சே தானே செக்கைக் கொடுக்கணும்! ஏன் முன்னாடியே கொடுத்தீங்க? செக்கை டெபாசிட் செய்யலாம்! அதைத் தவிர செக்கை ட்ராப் பாக்ஸில் இல்லையோ போடணும்? கவுண்டரில் ஏன் கொடுத்தீங்க? ஆக உங்க கேள்வியே தப்பு!

    அப்பாடா! தப்பிக்க ஒரு வழி கிடைச்சது! :)))))))

    பதிலளிநீக்கு
  3. புனரமைப்பு செய்து மிடில் கிளாஸ் மாதவியைக் "கண்டுகொண்டேன்"

    3. 3 to the power of 2 to the power of 4 = 9 to the power of 4
    2. 2 square root of 3 square root of 4

    பதிலளிநீக்கு
  4. அட? கொஞ்ச நேரம் போயிட்டு வரதுக்குள்ளே நெ.த. முந்திக் கொண்டார். இப்போத் தான் நானும் கண்டு பிடிச்சேன். சரி, சரி, பொற்காசுகள் குறைக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  5. அது... வந்து..... வந்து..... வந்.... வ....

    பதிலளிநீக்கு
  6. இடம் தவறி வந்துட்டோம் போலிருக்கே!?..

    பதிலளிநீக்கு
  7. கணக்கு பண்ணறதுல 'மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்' சரியாச் சொல்லுவார். அவரை இன்னும் காணவில்லை. இல்லைனா பெசோவி சொல்ல வாய்ப்பு இருக்கு. சாரி.. மி.கி.மாதவி. நீங்க முயற்சி செய்து விடை சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  8. மிடில் கிளாஸ் மாதவியைப் பார்த்து ..... விஸ்கி போத்தில் எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:)...
    எனக்கு விடை தெரியும் ஆனா முதல்லயே சொல்லிடக்கூடாது என பெரிய மனசு பண்ணி சொல்லாமல் போகிறேன்ன்ன்ன் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)

    பதிலளிநீக்கு
  9. ஆஆஆ கமோன்ன் கமோஒன் கில்லர்ஜிக்கு வாய் நுனிவரை வந்திட்டுது.... எல்லோரும் கொஞ்சம் பேசாமல் இருங்கோ ... சொல்லப்போரார் இப்போ அவர்....:) கரெக்ட்டாப் பதிலை.

    பதிலளிநீக்கு
  10. ///நான், ஸ்ரீராம், கேஜி ஆகியோர் வங்கிக்குச் சென்றோம்.////
    இந்த அசம்பாவிதம் எப்போ நடந்திச்சு?:) எனக்கொரு மிஸ்கோல் கொடுத்திருக்கலாமெல்லோ... கமெராவுடன் ஓடி வந்திருப்பேனே...
    சரி சரி மீ நாட்டில் இல்லை ட்றம்ப் அங்கிளுடன் மீட்டிங் இருக்கு அந்தாட்டிக்கா போறேன்ன் பய்ய் பாய் ...:)

    பதிலளிநீக்கு
  11. கேள்வியும் கொஞ்சம் கன்ஃப்யூசிங்காகத்தான் இருக்கு. ஒருவேளை, 2 to the power of 43, 4 to the power of 32 இப்படியும் எழுதலாமா? அதேபோல் ஸ்கொயர் ரூட்.

    @அதிரா-நீங்க நினைத்த விடை 'எனக்குத் தெரியாது' என்பதுதானே. ட்ரம்ப் இப்போது மெக்சிகோ சுவர் அமைக்க பணம் இல்லையான்னு கோபமா அவங்க நாட்டு வங்கிகிட்ட கேட்டிருக்கார். அப்படி இல்லைனா, இழுத்து மூடுங்கன்னு வேற சொல்லியிருக்கார். அவரைக் கூட்டிக்கொண்டு அன்டார்டிகா போய் என்ன பண்ணறது. சுவத்துக்கு ஐஸ் பாளங்கள் எடுத்துவரதுக்கா?

    பதிலளிநீக்கு
  12. நோ நோ நெல்லைத் த... தெரியாட்டில் தெரியாதெனச் சொல்லிடப் போறேன் இது அடுத்தவர்களுக்கு முன்னுரிமை குடுக்கிறேன்.. கர்ர்ர்ர்ர் கேள்வியைப் படிக்கவே ஒரு கிழமை வேணும் இதில எங்க போறதாம் நான் பதிலுக்கு...

    இல்ல அது அது சுவரைக் கட்டுறதா வேணாமா என ஆலோசனை கேட்கத்தான் என்னை அவசரமா அழைக்கிறார்ர்... நான் அவரின் பேசனல் செக்கரட்டறி எல்லோ:).. எனக்கு தற்பெருமை பிடிக்காது நெ. த:)

    பதிலளிநீக்கு
  13. AngelinMay 3, 2017 at 11:55 AM
    Last. .middle c.madhavi/////

    ஆஆஆஆஅ எங்கள் புளொக் இப்பூடி ஆடுதே... ஓ அஞ்சு லாண்டட்... அப்போ கன்போமா மீ எஸ்கேப்பூஊஊஊ:).

    பதிலளிநீக்கு
  14. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  15. கருத்துப் பகிர்வுக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  16. Well if factorial is allowed then the biggest is
    (4^32)! = (1.84467440737096e+19)! [ For information ( 2^43 = 8796093022208.0 ) ]

    My simple 'gnuplot' calculator works up to 170 !(factorial) and says 'upper limit exceeded' beyond 170 !(factorial), so I can't get the actual value of (1.84467440737096e+19)!, which is indeed a very big number.

    For the lowest number, as any mathematical sign be introduced anywhere, then simply writing '-'(minus) sign to the 'highest' number obtained by any means, gives the smallest possible number.

    பதிலளிநீக்கு
  17. // 3 to the power of 2 to the power of 4 = 9 to the power of 4 //

    I think, writing this way gives the highest number (w/o involving factorial).
    2^(3^4) = 2^(81) = 2.41785163922926e+24
    Adding factorial (if allowed) gives further possible highest possible.

    Draw a minus sign to the highest number obtained so, to get the lowest possible number.

    பதிலளிநீக்கு
  18. கவிதை கதைக்குமட்டுமேயோசிப்போம்

    பதிலளிநீக்கு
  19. Question 1
    // விடை, 1, 2, 3, 4, 5, 6 .................................... N வரை வரவேண்டும். //

    For N = 9, at least one solution each for 1 to 9 are

    (1) 3+2-4 = 1 [ also 3-(4/2) ]
    (2) 3*2-4 = 2 [ also (4 + 2)/3 ]
    (3) -3+2+4 = 3 [ also 3-2+sqrt(4) ]
    (4) (3-2)*4 = 4 [ also 2^3-4 ]
    (5) 3-2+4 = 5 [ also 2*4-3; (3^2)-4) ]
    (6) (4*3) / 2 = 6
    (7) sqrt(4)+3+2 = 7
    (9) 2+3+4 = 9

    Yet to get it for '8'. Need some time, I think.

    பதிலளிநீக்கு
  20. // You can draw square root, //

    A comment on this :
    Technically speaking, if valid mathematical symbols and only the numbers 2, 3 & 4 to be used, one cannot write/use 2^2 (meaning square of 2) & 3^3 (cube of 3) as both encounter repetition of same number. (Thankfully I haven't used)

    Going by the same principle, (i)square root, (i)cube root etc., shouldn't be allowed, as these symbols actually represent (1/2), (1/3) respectively in the powers of any number. And '1' is not allowed to be used. ( I used square root(4) to get 7)

    Also, square root / cube root shouldn't be used as square root (a) actually represents a^(1/2). '1' should be used. (same as the case of cube root)

    பதிலளிநீக்கு
  21. Upto 9 Madhavan has given. So, I continue further

    (4 x 3) + 2 = 10
    3^2 + sqrt(4) = 11
    3 x 2 x sqrt(4) = 12
    4^2 - 3 = 13

    பதிலளிநீக்கு
  22. // பெசொவி. said...

    (4 x 3) + 2 = 10 // ; the + must be - is understandable, to make it '10'

    பதிலளிநீக்கு
  23. ///சிறுசும் பெருசும்///
    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈ.... இங்கின சிறிசு நான்ன்ன்ன்:) பெரிசு ஆரூஊஊஊஊ? அஞ்சுவா??? ஹா ஹா ஹா இப்போ அமேரிக்காவை விட மோசமாத் தாக்குதல் நடக்கப்போகுதே:)..

    பதிலளிநீக்கு
  24. Eனக்கு பதில் தெரியும்!! But I am boycotting!! :-))

    பதிலளிநீக்கு
  25. //ஜாமீஈஈஈஈ.... இங்கின சிறிசு நான்ன்ன்ன்:) //

    ஹையோ ஹையோ அம்மம்மா ஆகப்போற வயசில் ஆசையைப்பாரு பூனைக்கு

    okay may be its second infancy haahaa

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!