Tuesday, April 25, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஒரு நாள் மயக்கம் - ரேவதி நரசிம்மன்     சீதைகள் ஆங்காங்கே ராமனை மன்னித்தபடிதான் இருக்கிறார்கள்.    அதில் ஒன்றுதான் வல்லிம்மா எழுதி இருக்கும் ஒருநாள் மயக்கம் சிறுகதை.

Monday, April 24, 2017

"திங்க"க்கிழமை : பருப்பு உருண்டைக் குழம்பு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி சமையல்


இதை எழுதும்போதே ருசி என் நாக்கில் உணரமுடியுது. எப்போவாச்சும் செய்யற குழம்பு இது. கொஞ்சம் மெனக்கெட்டால், அப்புறம் அடுத்த வேளைக்கு என்ன செய்யறதுன்னு யோசிக்க வேண்டாம்.

Sunday, April 23, 2017

ஞாயிறு 170423 : தேவலோகத்தில் பல் சக்கரம்!மேகக்கூட்டத்துக்கும் மேலே ஓங்கி வளர்ந்த கம்பனிகளின் மேல் உருக்கு கயிறு.

அது சக்கரங்களின் மேலே நழுவாமல் எப்படி நகர்கிறது என்பது புரியாத புதிர்  ஏ அப்பா....! தேவலோகம் என்பது இப்படித்தான் இருக்குமோ? எப்படி ஒரு மேகக்கூட்டம் இப்படி வந்தது? இந்த மாதிரி கடைகளை பெரும்பாலும் பெண்களே நடத்துகின்றனர்.
அவ்வப்பொழுது மோமோ எனப்படும் கொழுக்கட்டை போன்ற தின்பண்டத்தை செய்து சூடு ஆறாமல் ஹாட் பாக்கில் வைத்துக் கொண்டு 40 ரூபாய்க்கு 5 என்று விற்கிறார்கள்.  குளிருக்கு இதமாக இருக்கிறது.

(இதில் வெஜ்ஜா, நான் வெஜ்ஜா என்று கேட்டுக் கொண்டு சாப்பிடவேண்டும் என்று வெங்கட் சொல்லியிருக்கிறார்!)
 தேவலோகத்தின் வேறு பகுதி.ஊர் வழக்கப்படி கிடைத்த சிறு இடத்தில் இரண்டு பூச்செடி  நம் வழக்கத்தை மறக்காமல் அப்படியே அந்தப் பெரிய்ய்ய 
பல் சக்கரத்தை...எல்லோரும் கேட்பதற்கிணங்கி பயண விவரம்  இதோ.. 

சென்னை கல்கத்தா  பாக் டோக்ரா  விமானப் பயணம் நம் தேர்வு..
பாக் டோக்ரா டார்ஜீலிங் கார் பயணம் யாத்ரா கம்பெனியின் ஏற்பாடு 

தங்கும் விடுதிகள் யாத்ராவின் லிஸ்டிலிருந்து  நம் தேர்வு.  இரண்டு அறை 5 பேருக்கு.
  

உள்ளூரில் பயணம் செய்ய கார்.  டைகர் ஹில், மௌண்டனீரிங் இன்ஸ்டிடியூட்  மிருகக் காட்சி சாலை புத்த மேடம் கூம் ரயில் நிலையம் இங்கெல்லாம் அவர்கள் சொல்லும் வழியில்.


டார்ஜீலிங் கேங்டாக் கார் பயணம், அங்கு தங்கள்,  நாதுலா பாஸ்.  ஹர்பஜன் சிங் மந்திர்  இங்கெல்லாம் போய்  வர இந்திய பாஸ்போர்ட் தேவை.


ஆக  டார்ஜீலிங் போய் தங்குமிடம் சேர ஒரு நாள் 

டார்ஜீலிங் சுற்றல் ஒரு நாள் 

ரோப் வேயில் பிரயாணம் நம் செலவு.

 டார்ஜிலிங் கேங்டாக் கார் பயணம் ஒரு நாள் 

கேங்டாக் சுற்றல் ஒரு நாள்.

இரவு தங்கல் & amp;  ஊர் திரும்பல் ஒரு நாள் 

விடுதிகளில் காலை உணவு இலவசம்.

5 நாள் 4 இரவுகள் 5 பேருக்கு 130000 ரூபாய்.

யாத்ரா நன்றாக நடத்தினர். மேலும் விவரங்கள் விரைவில் தனிப்பதிவாக வரும்....

Saturday, April 22, 2017

சிரிய போட்டோகிராபரின் பெரிய செயல்

1)  ஒவ்வொரு ஊரிலும் இதுபோல நடந்தால் ஊருக்கு நல்லது.


2)  சென்னையில் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் ‘ரே ஆஃப் லைட் பவுண்டேஷன்’ 15  ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது.  டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.


Wednesday, April 19, 2017

புதன் 170419 :: என்ன? எத்தனை? யார்?


சென்ற வாரக் கேள்வியையும் படத்தையும் பார்த்தவர்கள், உடைந்து இருப்பது X ஊர் பகுதி கை காட்டி என்பதை யூகித்து, அந்த உடைந்த பகுதியை, மிஸ்டர் எக்ஸ் தான் வந்த பாதை நோக்கித் திருப்பிவைத்தால், R செல்லும் வழியைக் கண்டுபிடிப்பார் என்று விவரமாக  சொல்லியிருக்கிறீர்களா? 

சொல்லியிருந்தால் நூறு மார்க். இல்லையேல் 99 மார்க். 

1)

என்ன பாடல்? 

Image result for milk       Image result for tick

Image result for fruit Image result for tick

Image result for p chidambaram   Image result for X


2)

ரொம்ப சிம்பிள் கேள்வி:

'நாற்காலி' க்கு எத்தனை கால்?


3)  
படங்களைப் பார்த்தால் எந்தப் பதிவர் நினைவுக்கு வருகிறார்? 


    Monday, April 17, 2017

"திங்க"க்கிழமை : உருளைக்கிழங்கு கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிஉருளைக்கிழங்கு தேங்கா அரைச்ச கூட்டு எனக்கு எப்போதும் பிடித்தமானது. இது சாத்துமது, வெந்தய, வற்றல் குழம்புகளுக்கு ரொம்ப நல்லா சேரும். சமீபத்துல என் ஹஸ்பண்டும் பையனும் இங்க வந்திருந்தாங்க. அப்போ, இந்தக் கூட்டைப் பண்ணினேன். என் பையன் ரொம்ப நல்லா இருக்குன்னு ஆசை ஆசையாச் சாப்பிட்டான். சாதத்துக்கே தொட்டுக்கொண்டு சாப்பிடறேன் என்றான். சுலபமா செய்துவிடலாம். இப்போ செய்முறையைப் பார்ப்போமா?

உருளைக் கிழங்கை தோலோடையே, சதுரமாக சிறு சிறு துண்டுகளாக திருத்திக்கோங்க.  ஒரு பாத்திரத்தில் காயைப் போட்டு, அதுக்கு கொஞ்சம் மேல் வரை தண்ணீர் இருக்கட்டும். உப்பும் மஞ்சப் பொடியும் சேர்த்துக்கோங்க. இப்போ கொதிக்கவைக்கவேண்டியதுதான்.  உருளைக்கிழங்கு வெந்திருக்கணும், ஆனால் ரொம்பக் குழைந்துவிடக்கூடாது.இப்போ, 5 ஸ்பூன் தேங்காயும், ½ ஸ்பூன் ஜீரகமும், 1-2 வற்றல் மிளகாயும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். (அதிரா  ‘செத்தல் மிளகாய்’ என்று குறிப்பிடுவார். பச்சை மிளகாய் செத்துப்போனாத்தான் வற்றல் மிளகாயா ஆறதுனால அப்படி இலங்கைல சொல்றாங்களா?)உருளைக்கிழங்கு ஆனபின்பு (வெந்தபின்பு), அதோட இந்த பேஸ்டைச் சேர்த்து கலந்துகொண்டு, அடுப்பில் 1-2 நிமிடத்துக்கு சூடு செய்தால் போதும். ஒருவேளை, கூட்டில் தண்ணீர் ஜாஸ்தியாகிவிட்டால், அடுப்பை அணைப்பதற்கு முன்பு, 1 ஸ்பூன் அரிசிமாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக்கவேண்டியதுதான்.அடுப்பை அணைத்தபின், கடுகு, உளுத்தம் பருப்பு, 1 ஆர்க் கறிவேப்பிலை திருவமாறினால் போதும். கூட்டு தயார். எப்போவும் உருளைக் கிழங்கை ரோஸ்ட், கட் கறியமுது, பொடிமாஸ், மசாலா என்று செய்வதற்குப் பதிலாக இந்தக் கூட்டைச் செய்துபாருங்கள்நான் உருளைக்கிழங்கு கூட்டு செய்த அன்று, கத்தரிக்காய் தொகையலும் வெள்ளரிப் பச்சிடியும் செய்தேன். என் பையன் வந்தபோது, முள்ளங்கி சாம்பாரும் உருளைக்கிழங்கு கூட்டும் செய்தேன்.

ஜெ. அவர்கள் மறைந்தபோது, அவருக்கு உருளைக்கிழங்கு கூட்டு ரொம்பப் பிடிக்கும், வீட்டில் அடிக்கடி அதைச் செய்யச்சொல்லி சாப்பிடுவார் என்று படித்தேன். அது இதுவாக இருக்குமா? 

பின்குறிப்பு:  உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது, ‘உருளைக்கிழங்கின் வாய்வு’ தன்மையைக் குறைக்கும். எங்க அப்பா, பலாச்சுளை சாப்பிட்டபின், ஒரு சிறு துண்டு பலாக்கொட்டையைச் சாப்பிடுவது நல்லது என்று சொல்லுவார் (பலாக்கொட்டையையோ அல்லது நெல்லிக்காயையோ தண்ணீர் அருகில் இல்லாமல் சாப்பிடவேண்டாம். சமயத்தில் தொண்டையை அடைத்துக்கொள்ளும்)


நீங்களும் செய்துபாருங்கள்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.[ எங்கள் பாஸ் உருளைக்கிழங்கு முட்டைகோஸ் போட்டு ஒரு கூட்டு சாம்பார் செய்வார்.  எனக்கு மிகவும் பிடிக்கும்.  அது பற்றி எங்கள் பிளாக் திங்கற கிழமையில் எழுதிய ஞாபகம்!  இது உருளைக்கிழங்கு மட்டும் போட்டா?  செய்துடுவோம்! - ஸ்ரீராம் ]

Sunday, April 16, 2017

ஞாயிறு 170416 :: மங்கை மோகக் கூந்தல்பிரதட்சணமாக ஒரு சுற்று...

Saturday, April 15, 2017

வாட்ஸாப்பினால் ஆன பயனென்கொல்...1)  1982 இல் தீர்க்கமாய் சிந்தித்து, உறுதியாய் ஒரு முடிவினை எடுத்தேன்.    என் வகுப்பறை, ஐ.ஐ.டி யில், நான்கு சுவர்களுக்குள் இல்லை என்பது தெரிந்தது.     என் வகுப்பறை, கிராமங்களில், காடுகளில், வயல் வெளிகளில், ஆற்றங்கரைகளில் இருப்பது புரிந்தது.        என் மாணவர்கள் ஐ.ஐ.டி யில் இல்லை என்பதை அறிந்தேன்.      

Friday, April 14, 2017

வெ வி வீ 170414


Wednesday, April 12, 2017

புதன் 170412


LETTERBOX மொத்தம் ஒன்பது லெட்டர்ஸ் என்று கணக்குப் பண்ணி, முன் மொழிந்த மிடில்கிளாஸ் மாதவிக்கும், வழி(மொழி)ந்த மற்ற எல்லோருக்கும் பாராட்டுகள்.

இந்த வாரக் கேள்வி:  


மிஸ்டர் எக்ஸ், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சமயம்,  அதாகப்பட்டது, கூகிள் மாப், அலைபேசி, தொலைபேசி, இத்யாதிகள் இல்லாத நாட்கள்.    நடை பயணம் சென்றார்.

அவர் X என்னும் ஊரிலிருந்து R என்னும் ஊருக்கு செல்லவேண்டியிருந்தது. திசைகாட்டிகளை நம்பி, பயணம் தொடங்கியிருந்தார்.

அவருடைய ஊரிலிருந்து, சற்றேறக்குறைய பத்து காத தூரம் சென்றால், ஒரு நாற்சந்தி வரும். அந்த நாற்சந்தியின் மத்தியில் ஒரு நால் வழிகாட்டி இருக்கிறது, அதன்படி சென்றால் R ஊரை அடையலாம் என்று சென்றார்.

ஆனால், அங்கு சென்றவுடன் அவர் கண்ட காட்சி, அவரை திகைப்பில் ஆழ்த்தியது.


அந்த வழிகாட்டி சமீபத்திய புயலில், வேரோடு விழுந்து உடைந்து கிடந்தது.
அந்த சுற்றுப்பக்கம் பதினெட்டுப் பட்டி தூரத்திற்கு ஆளரவமே இல்லை.மிஸ்டர் எக்ஸ், அவர் செல்ல நினைத்த R என்ற ஊருக்குப் போய்ச்சேர உங்களால் உதவ இயலுமா?
                

Tuesday, April 11, 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: விதி - ரெங்கசுப்ரமணி     

     இந்த வாரம் சாதாரண கேட்டு வாங்கிப் போடும் கதை!  சீதை அடுத்த வாரம்!  அதே சமயம் சீதை ராமனை மன்னிக்கும் முதல் கதையைப் படித்த எங்கள் ஆசிரியர் திரு ராமன் உடனடியாக ஒரு சின்னஞ்சிறு கதையை அனுப்பி வைத்தார்.  அதை இங்கு கீழே தந்திருக்கிறேன்.

Monday, April 10, 2017

"திங்க"க்கிழமை :: கேரட் பீட்ரூட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


கேரட் அல்வா ஓகே. பீட்ரூட் அல்வா ஓகே. இது என்ன கேரட் பீட்ரூட் அல்வா? சமீபத்தில் என் ஹஸ்பண்ட், பசங்க ஆசைப்பட்டாங்கன்னு கேரட் அல்வா பண்ணினேன் என்று சொன்னாள். Sunday, April 9, 2017

ஞாயிறு 170409 :: மேகங்களே... வாருங்களே..மேகங்கள் என்னைத் தொட்டுப் போவதுண்டு....Friday, April 7, 2017

Thursday, April 6, 2017

குமுதமும் விகடனும்நண்பர்கள் அனைவரும் புஸ்தகாவில் மின் நூல் வெளியிடுவதை ஆங்காங்கே பார்த்துக் கொண்டிருந்தேன். 

Wednesday, April 5, 2017

புதன் 170405 :: கணக்குப் பண்ணுங்க


சென்ற வாரக் கேள்வியில், நான் போட்ட (?) குவார்ட்டர், அமெரிக்கன் குவார்ட்டரை நினைத்துதான். அங்கே எல்லாம் குவார்ட்டர் என்றால் அதுதான் அர்த்தம்! நம்ம ஊர்லதான் குவார்ட்டர் என்று சொன்னாலே, மக்கள் "கைக்கு அடக்கமா, குடிச்சிப் பார்க்க வாட்டமா" இருக்கற பாட்டிலை நினைக்கிறார்கள். 

நெல்லைத் தமிழன், துளசிதரன் தில்லையகத்து, அபயா அருணா ஆகியோர் கொடுத்திருந்த யோசனைகள் பிராக்டிகல். 

அவர்களுக்கு ஆளுக்கு ஒரு குவார்ட்டர் அனுப்பலாம் என்று ஐம்பது ரூபாயை வெளியில் எடுத்தார் நண்பர். 

Sunday, April 2, 2017

ஞாயிறு 170402 ::


சிறகுக்குள் முகம் மறைத்து...

Friday, March 31, 2017

நம்பினால் நம்புங்கள்! காட்சி + கட்டுரை


தான் கண்ட காட்சிகளையும், எண்ணங்களையும் பகிர்ந்துகொள்கிறார்,

'நெல்லைத் தமிழன்' 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2013ல் லண்டன் சென்றிருந்தபோது, ரிப்ளேயின் ‘நம்பினால் நம்புங்கள்’ காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொண்டுள்ளேன். 


அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்ளே என்பவர், ‘நம்பமுடியாத, அதிசயமான’ பொருட்களைச் சேகரித்து, முக்கியமான நகரங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். பெரும்பாலும் ஒரிஜினல் பொருட்கள் இருந்தாலும், உயிர்ப்புடன் கூடிய (life size) பிரதிகளும் உண்டு. அவைகள், ரிப்ளேவின் ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற தலைப்பில் காட்சியகங்களாக இருக்கின்றன. நான் லண்டனில் உள்ள ‘நம்பினால் நம்புங்கள்’ காட்சியகத்தில் எடுத்த சில புகைப்படங்கள்.
 ===============================

Wednesday, March 29, 2017

புதன் 170329


சென்ற வாரக் கேள்விகளில் ....

முதல் கேள்வி அ ஆ வ எழுதும்போது என் காதில் விழுந்த வார்த்தைகளின் முதல் எழுத்துகள்  அவை! அப்பொழுது ஏதோ ஒரு நகைச்சுவைச் சானலில், யாரோ " அய்யோ ஆ வலிக்குதே ...." என்று கூவினார்கள். சத்தம் மட்டும்தான் பக்கத்து அறையில் இருந்த என் காதில் விழுந்தது. அதற்குள் அந்த சானலை பக்கத்து சானலுக்கு மாற்றிவிட்டார்கள். அடுத்த வார்த்தை, " டாக்டர். / நான் (என்ன பண்ணுவேன்) / உன்னை (சும்மா விடமாட்டேன். ) / இதற்கு (பழி வாங்கியே தீருவேன்) என்று ஏதேனும் இருந்திருக்கும். 
    

Monday, March 27, 2017

"திங்க"க்கிழமை – வாழைக்காய் புளிக்கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி     எங்க அம்மா பண்ணறதுல எனக்கு இந்தக் கூட்டு எப்போவும் பிடிக்கும். இது பண்ணம்போதெல்லாம், எங்க அம்மா மோர்க்குழம்பும் செய்வார்கள். இந்த இரண்டு காம்பினேஷனும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 


Friday, March 24, 2017

Thursday, March 23, 2017

ஒண்ணுக்குப் போகும் மரம்
     பொதுச் சாலைகளில் அடிக்கடி நாம் காணும் காட்சி ஆங்காங்கே சிலர் திடீரென இயற்கை உபாதையைக் கழிக்க ஒதுங்குவது.  


Wednesday, March 22, 2017

புதன் 170322


சென்ற வாரம் கேட்டவை: 

1)        What comes at ?            

                       1           0            6

                       0           8            7

                       0           1           ?


2)  ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்படப் பாடல் எது? கூகிள் பக்கம் போனால் கைய வெட்டிப்புடுவேன். ஜாக்கிரதை! 


3 )   What is the 'one word' which is explained here? 

 1. . a position to the left or right of an object, place, or central point.
  • either of the two halves of an object, surface, or place regarded as divided by an imaginary central line. 
 2. .
  an upright or sloping surface of a structure or object that is not the top or bottom and generally not the front or back.
  • either of the two surfaces of something flat and thin, such as paper. 
 3. .
  a part or region near the edge and away from the middle of something.
 4. a person or group opposing another or others in a dispute, contest, or debate.

பதில்கள் : 

Monday, March 20, 2017

"திங்க"கிழமை : கொள்ளு - பயறு புட்டு (ஒக்காரை) -ஹேமா ரெஸிப்பி
    ஒரு நாள் இதில் சாம்பிள் எடுத்து வந்து கொடுத்தபோதுதான் போட்டோ எடுத்து, விவரம் எழுதித் தரலாமே என்று ஹேமாவிடம் நான் கேட்டேன்.

Sunday, March 19, 2017

ஞாயிறு 170319 : முகம் காட்ட மறுத்தாய்...
"முகத்தை முகத்தை மறைத்துக் கொண்டால்....."


Saturday, March 18, 2017

அனுரத்னா என்னும் அரசு மருத்துவர்.....1)  சென்னையில் பார்வையற்றவர்களுக்கு என்று ஸ்பெஷல் பஸ்.  நல்ல திட்டம்.  ஆனால் எப்போ வருமோ!  இப்போது Near Futureல எதுவும் கண்ணில் படவில்லை.  கொஞ்ச நாட்கள் முன்பு உடல் ஊனமுற்றவர்களுக்கு என்று சில ஸ்பெஷல் பஸ்கள் (கொஞ்ச வருடங்கள் முன்பு) இயங்கின.  இப்போது அவை கண்ணிலேயே படவில்லை! அதேபோல் இவையும் அறிவிப்போடு நின்று விடாமல் வந்தால் சரி!  (சென்னை) அரசியல்வாதிகளை நம்ப முடியாதே!
 
 

Wednesday, March 15, 2017

புதன் 170315


சென்ற வாரம் கேட்டவை:

1) பூர்த்தி செய்க :  

   268,  1082 ,  ------

2)     What is the single word for, 

identical, uniform, indistinguishable, matching.


3)   Find the odd man(?) out : 

Acquisition, Address, Adviser, Alpha, Amorphous. 


Tuesday, March 14, 2017

Monday, March 13, 2017

"திங்க"க்கிழமை :: மாஇஞ்சி நெல்லித் தொக்கு - ஹேமா ரெஸிப்பி
     திங்கற கிழமையில் இன்று "ஆரோக்கிய சமையல்" ஹேமாவின் கைவண்ணம்!  இவரைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.  இவர் செய்வதெல்லாம் ஆரோக்கியச் சமயலாகவே இருக்கும்.  நான் இவரிடம் சொல்வேன்..  "நீங்கள் ஆரோக்கியச் சமையல்.. நான் அயோக்கியச் சமையல்" என்று..  


Sunday, March 12, 2017

ஞாயிறு 170312 :: ஆட்டுக்கு எத்தனை கொம்பு?
மழை மே கம் என்று சற்றே அவசரமாக நடக்க ஆரம்பித்தோம்.

Saturday, March 11, 2017

ரமேஷ் பாபுவும் இரண்டு பாலஸ்தீன மாணவிகளும்
1)  முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் பணம் சம்பாதிக்கலாம், முன்னேறலாம்.  இவர் தனது

Wednesday, March 8, 2017

புதன் 170308


சென்ற வாரக் கேள்விகளுக்கு, பதில்கள் : 

Tuesday, March 7, 2017

Sunday, March 5, 2017

ஞாயிறு 170305 :: வண்ணப்பறவை சிறகடிக்குமா?
Himaalayan Mountaineering Institute

Wednesday, March 1, 2017

புதன் 170301


சென்ற வாரப் புதிர்களுக்கு எல்லோருமே சரியான பதில்கள்

Sunday, February 26, 2017

Friday, February 24, 2017

Thursday, February 23, 2017

இதுவும் அதுவும் - சின்ன வீடு


================================================================

சின்ன வீடு

Wednesday, February 22, 2017

புதன் 170222


சென்ற  வாரக்

Tuesday, February 21, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : உள் உணர்வு     இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியை

Monday, February 20, 2017

"திங்க"க்கிழமை 170220 :: ஆலு பனீர் கிரேவி


கிச்சன் பக்கம் சென்று நாளாகி விட்டது.  ஆயிரத்தில் ஒருவன் எம் ஜி ஆர் மாதிரி நேற்று என் பாஸிடம் "பூங்கொடி.. இரு..  சற்று விளையாடி விட்டு வருகிறேன்" என்று கிச்சனைப் பார்க்கக் கிளம்பியதும் பாஸ் என் பக்கம் திரும்பி புன்னகைக்கு பதில் பீதிப்பார்வை பார்த்தார்.கத்தரிக்காய் - முருங்கைக்காய்  -  இதை என் மாமியார் ஏனோ "முருங்கிக்காய்" என்பார்! -  வெந்தயக்குழம்பு செய்து (ப்பூ....  இதெல்லாம் ஜுஜுபி!  ஆனால் அதை பற்றி நாம் கதைக்கப் போவதில்லை சகோதரி அதிரா..) ) ஓரமாக வைத்து விட்டு...  கறிக்கு (கரமது, பொரியல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்) என்ன செய்யலாம் என்று பார்த்தேன்.  சேனைக்கிழங்கு கண்ணில் பட்டது.  வேண்டாம்.  ஒரே ஒரு கத்தரிக்காய் (மீதி) இருந்தது.  வேண்டாம்.  கண்ணில் பட்ட முட்டைக்கோஸையும் பன்னீர்செல்வத்தை ஒதுக்கிய 122 எம் எல் ஏக்கள் போல விலக்கினேன். 


உருளைக்கிழங்கை வைத்து விளையாட முடிவு செய்தேன்!  ஆம், விளையாட்டுத்தான்.  கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து ஒரு குழந்தை விளையாடுமே..  அது போல அடுத்த கொஞ்ச நேரத்துக்கு நானும் ஒரு குழந்தையாகிப் போனேன்.


அரசியலில்தான் பன்னீரைக் கொண்டு வர முடியவில்லை.  சமையலில் பனீரைக் கொண்டு வருவோம் என்று முடிவு செய்தேன்.
நடுத்தர அளவில் ஐந்து உருளைக் கிழங்கை வேகவைத்து எடுத்துத் தோலுரித்துக்கொண்டு..


குடைமிளகாயை நறுக்கி எடுத்துக்கொண்டு,நான்காக வெட்டிய பெரிய வெங்காயத்தைப் பிரித்து -  ஆம், பிரித்து -  இதழ்களை பிரித்து எடுத்துக்கொண்டு...


பனீரை நறுக்கி எடுத்துக்கொண்டு..
இரண்டு தக்காளி, நான்கு பச்சைமிளகாயை அரை ஸ்பூன் பெருஞ்சீரகம், கொஞ்சூண்டு பட்டையுடன் வதக்கி எடுத்துக் கொண்டு,துருவிய அரைமூடித்  (சிறிய மூடி!) தேங்காயுடன் கொஞ்சம் கொத்துமல்லி சேர்த்து  மிக்சியில் அரைத்துத் தனியாக வைத்துக்கொண்டு.....


தோல் நீக்கிய உருளையில் உப்பு, காரப்பொடி, பெருங்காயம், தூவிக் கொண்டு,

குடை மிளகாயையும், வெங்காயத்தையும் தனித்தனியாக உப்பு கொஞ்சம் சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு.. (தனித்தனியாக உப்பு சேர்ப்பதால் மொத்தமாக எவ்வளவு போடுவது என்று வேண்டாமே என்று இந்தமுறை இப்படி)


காரத்தில் ஊறிய உருளையை வாணலியிலிட்டுத் திருப்பி,

குடைமிளகாய் சேர்த்து...
வெங்காயம் சேர்த்து...  இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்து..

             


அரைத்த கலவையைச் சேர்த்து...


பனீரைப் போட்டுத் திருப்பி..   செஷ்வான் பொடியை  தூவி, திருப்பி...வெளியில் வந்தால் மேஜையில் பாஸ் காலை வாங்கி வைத்திருந்த ப்ரெட்!  விடலாமா?   எடுத்தேன்.  வாணலியில் இட்டு புரட்டினேன்.   
இறக்கி வைத்து விட்டு வெளியில் வந்தால் கண்ணில் பட்ட கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கி அதன்மேல் தூவி..வறுத்த ப்ரெட் துண்டங்களை போட்டுப் புரட்டி..
சாப்பிடலாம்.  ரெடி!  

"இதைச் செய்த நேரத்துக்கு நான் ஒரு ஃபுல் சமையலே செய்திருப்பேன்" என்று பாஸ் இடது தாவாங்கட்டையையையும் இடது தோள்பட்டையையும்  இணைத்துக் கொண்டதை நான் இங்கு சொல்லப்போவதில்லை.  


பெரியவன் கருத்து  :  "குடைமிளகாயை இன்னும் சிறிதாக நறுக்கி, இன்னும் கொஞ்சம் வதக்கி இருக்கலாம்!"   சற்றுப் பெரிய அளவில் இருந்ததால் அது வதங்கவில்லை  என்னும் முடிவுக்கு வந்துவிட்டான் போல! இருக்கலாம்.  திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


சிறியவன் கருத்து  :  "ஓக்க்க்க்கே....  ஆனால் ஒன்று சொல்லணும்... இது மாதிரி சாப்பிட்டதில்லை.  பனீர் செமையாய் சேர்ந்திருக்கு!"


அண்ணன் மகன் கருத்து  :  "நல்லாயிருக்கு.  இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாம். "  ஆமாம்....  தக்காளியும், தேங்காய்த்துருவலும் காரத்தைக் குறைத்திருக்கும். 


கணினியை வைத்தியம்  இளைஞரின் கருத்து :  "இதுவரை இதுமாதிரி சாப்பிட்டதில்லை ஸார்.  நன்றாக இருக்கு"  செய்முறையைச் சொல்லியிருந்தால் தெறித்து ஓடியிருப்பார்.  அப்புறம் என் கணினி எப்படிச் சரியாகும்!  எனவே நன்றி கூறிப் புன்னகைத்து விட்டு மௌனமானேன்.


நன்றி...  மீண்டும் ஒரு திங்கறகிழமையில் உங்களைச் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுவது..  உங்கள்...