புதன், 4 மே, 2016

S L V 4

   
உலகில் பொருட்கள் மூன்று நிலைகளுள் ஒன்றாகத்தான் இருக்க முடியும். திரவம், திடம், வாயு. இது பள்ளிக்கூடத்துப் பாடம். இது விரைவில் நான்காக அதிகரிக்கக் கூடும். 
     

நீர் மூலக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள், தற்செயலாக இந்த மூன்று நிலைகளையும் சாராத ஒரு புதிய நிலையில் உள்ள பொருளைக் கண்டனர். இந்த புதிய நிலைக்கு அமெரிக்காவின் ஆற்றல் துறையை சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வக விஞ்ஞானிகள், 'குவாண்டம் சுழல் திரவம்' என்று பெயரிட்டுள்ளனர். 
      
நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்தே சில பொருட்கள், 'நான்காம் நிலை'யில் இருப்பது பற்றி அவ்வப்போது பேச்சு அடிபட்டு வந்தது. குறிப்பாக சில வகை காந்தங்களில் இந்த நிலை இருப்பதாக சொல்லப்பட்டது. குவாண்டம் இயற்பியலின்படி நீரில் உள்ள இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும், ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இதுவரை காணாத வடிவத்துடனும், தன்மையுடனும் ஆய்வுக்கூடத்தில் செயல்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 
       
ஆனால், ஆய்வுக் கட்டுரை மூலம் அந்த நான்காம் நிலையை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை. இந்த ஆய்வு முடிவுகள், 'பிசிகல் ரிவ்யூ ஆப் லெட்டர்ஸ்' என்ற இதழில் வெளியாகியுள்ளது.
    
நன்றி : தினமலர், ஏப்ரல் 28, 2016. 

எங்கள் வாசகர்களுக்கு ஒரு கேள்வி: தலைப்பில் "S L V 4" என்று குறிப்பிட்டுள்ளேனே, அதற்கு என்ன விளக்கம் என்று சரியாக யாராவது சொல்லமுடியுமா? 
     

   

11 கருத்துகள்:

  1. water can exist is all the forms Solid, Liquid, vapour at 4^C. And it is SLV4. Correct?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. ஜெயகுமார்!
    எங்கேயோ போயிட்டீங்க!
    ஆனா அது இல்லை, நான் சொல்ல வந்தது!
    If maintained at 4 deg C , water will remain a solid (ice) only.

    பதிலளிநீக்கு
  3. புடிங்க, புடிங்க - ஓடறார் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  4. அறிவியலுக்கும் நமக்கும் கொஞ்சம் தூரம் அதிகம்! படிப்பேன்! ரசிப்பேன் வியப்பேன்! அதோட சரி!

    பதிலளிநீக்கு
  5. அடடா தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்
    என்னைய விட்ருங்கோ....

    பதிலளிநீக்கு
  6. now water can be in four forms s l v 4
    s = solid
    l = liquid
    v = vapor
    4 = fourth state for water molecules

    பதிலளிநீக்கு
  7. // mano said...
    now water can be in four forms s l v 4
    s = solid
    l = liquid
    v = vapor
    4 = fourth state for water molecules

    May 13, 2016 at 11:46 AM //

    Very good! Well done!

    பதிலளிநீக்கு
  8. அதான் லேட்டா எல்லாம் வரக் கூடாதுனு....சொல்ல வந்த விடையை மனோ அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்....முதல் மூன்றும் பெரும்பான்மையோர் சொல்லிவிடுவர்....4 தான் புதிது பலருக்கும்.
    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!