திங்கள், 26 மே, 2014

திங்க கிழமை 140526 :: ஸ்வீட் எடு, கொண்டாடு!

                
ஓட்ஸ் பாயசம். 
          

நூறு கிராம் ஒயிட் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளவும்.
            

ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, ஓட்ஸை சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
        
வறுத்தாச்சா?
              
வெரி குட். இப்போ இரண்டு கப் தண்ணீர் விட்டு, ஓட்ஸ் நன்றாகக் கரையும் வரை வேக விடவும் 
            
விட்டாச்சா? 
       
   
இந்தக் கலவையில் நூறு கிராம் சீனியைப் போட்டுக் கரையவிடவும். (இதுதான் காகத்திற்கும் சீனிக்கும் உள்ள ஒற்றுமை. இரண்டுமே கரையும்!) 
            
கரைச்சாச்சா?
         

இப்போ கால் லிட்டர் பாலை ஓட்சில் சேர்த்து, கொதிக்க வைக்கவேண்டும். 
           
கொதிச்சுடுச்சா?
           
கீழே இறக்கி வைக்கவும். 
           
இருங்க அவசரப்படாதீங்க! 
            

ஐந்து கிராம் பிஸ்தாப் பருப்பு, மூன்று நான்கு முந்திரிப் பருப்புகள் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்து, பாயசத்தில் போடுங்கள். 
            

ஜாதிக்காய் அரை மட்டும் எடுத்து, நெய்யில் வறுத்துப் பொடி செய்து, பாயசத்தில் போடவும். கலக்கவும். 
             
இருபது நிமிடங்கள் ஆற விடுங்கள்.  
             
ஓட்ஸ் பாயசம் ரெடி. அனைவரும் பகிர்ந்து அருந்துங்கள். 
             

10 கருத்துகள்:

  1. (இதுதான் காகத்திற்கும் சீனிக்கும் உள்ள ஒற்றுமை. இரண்டுமே கரையும்!) இனிமை...

    பதிலளிநீக்கு
  2. இதை நாங்க ஓட்ஸ் கஞ்சிங்கற பேரிலே குடிக்கிறோமே! :)))))

    பதிலளிநீக்கு
  3. 1. ஓட்ஸ் தயிர் சேர்த்து ஊற வைச்சுத் தயிர் சாதம் போலத் தாளித்துச் சாப்பிடலாம்.

    2. ஓட்ஸ் பாலில் வேக வைத்து சர்க்கரை சேர்க்காமல் பழங்கள் அல்லது உலர்பழங்கள் சேர்த்துத் தேன் விட்டுச் சாப்பிடலாம்.

    3. ஓட்ஸ் தயிரில் ஊற வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை கொத்துமல்லி சேர்த்துக் கொஞ்சமே கொஞ்சம் அரிசிமாவு அல்லது மைதா மாவு சேர்த்து ஊத்தப்பமாய்ப் பண்ணலாம்.

    4. ஓட்ஸ் வறுத்துப் பொடி செய்து சர்க்கரை சேர்த்து நெய் விட்டு மு.ப. ஏலக்காய் சேர்த்து உருண்டை பிடிக்கலாம்.

    5. காய்கள் சேர்த்து ஓட்ஸ் உப்புமா பண்ணலாம். இதுக்கு ஆர்கானிக் ஓட்ஸ் என்றால் நல்லா இருக்கும். :))))

    இப்போதைக்கு இவ்வளவு தான். மிச்சத்தை விரைவில் வெள்ளித்திரையில் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  4. செய்து பார்க்கிறோம் + வெள்ளித்திரையில் காண ஆவலுடன் உள்ளோம்...!

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீரம் ஒண்ணு சொன்னால், கீதா பத்து சொல்வார். இதுதான் ரேஷியோ<}}}} @துரை ஓட்ஸ் ஓடறதா.கீதா வடையெதுவும் கிடையாதா.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா

    சிறப்பான செய்முறை விளக்கம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. சீனிக்கும் காகத்திற்குமுள்ள ஒற்றுமையை ரசித்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ஓட்ஸ் பாயசம்.....

    நல்லா இருக்கும் போல இருக்கே.... செஞ்சு பார்த்துடுவோம்!

    பதிலளிநீக்கு
  9. ஓட்ஸ் பாயசம்.....

    நல்லா இருக்கும் போல இருக்கே.... செஞ்சு பார்த்துடுவோம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!