வியாழன், 13 செப்டம்பர், 2012

தோனியும், சென்னை ரசிகர்களும், எதிர்வீட்டு நாயும்!




"சென்னை மேட்ச் பார்த்தீங்களா...?"

"ம்.....கெட்ட நேரம்.... எப்பவும் பார்க்க மாட்டேன்... அன்னிக்குப் பார்த்துத் தொலைச்சேன்!"

"எப்படி இருந்தது? அனாவசியமா தோத்துட்டோம்....!"

"யுவராஜ் மீண்டு வந்தது ரொம்ப சந்தோஷம். உடம்பு சரியில்லைன்னாலும் நல்லா விளையாடினார். கோஹ்லி பிரமாதப் படுத்தினார். என்ன, மத்தவங்க வந்து அடிச்சுடுவாங்கன்னு விட்டுட்டுப் போகக் கூடாது... தானே அடிச்சுடுவோம்னு பொறுமையா விளையாடியிருக்கலாம்.... ம்ஹூம்"

"என்ன பெருமூச்சு? ஒரே ரன்னுல தோத்ததா?"

"தோல்வியில் என்ன இருக்கு... ஏன் தோத்தோம்னு நினைச்சாத்தான்..."

 
 "தோனி விளையாடினதைப் பார்த்தீர்களா?"

"அவர் எங்கேங்க விளையாடினார்? சும்மாத்தானே நின்னுகிட்டிருந்தார்?"

"அப்போ அவர் விளையாடலைன்னு சொல்றீங்களா?"


"அபபடி இல்லை... விளையாடியிருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்.."

"அதாவது நல்லா விளையாடியிருந்தா... இல்லையா?"

"ஒருவகைல நல்லாத்தான் விளையாடிட்டார்.... ரசிகர்களோட எதிர்பார்ப்போட நல்லா விளையாடிட்டார்"

"ம்ம்ம்ம்....ஏழு ஓவர்ல 49 ரன் வேணும்னு இருக்கும்போது உள்ளே வந்தார்..."

"என்னது.... இருபது ஓவர் மேட்சா... ? ஆட்டம் ஓவரா...! ஐம்பது ஓவர் மேட்ச்னு நினைச்சு இல்லே நின்னு விளையாடினேன்..." 


"கடைசி ஓவர்ல அவர் ஒரு Four அடிச்சவுடனே கவாஸ்கர் கூடச் சொன்னார் பார்த்தீங்களா....  He is a finisher னு... அதற்கு அர்த்தம் என்னன்னு இப்போதானே புரியுது... சென்னை ரசிகர்களோட எதிர்பார்ப்பை எல்லாம் Finish செஞ்சுட்டாரே..."

மீண்டு வந்த யுவராஜ்...

"அவங்களுக்கு ஒரே கொண்டாட்டம்... ஒரே ரன்... ஒரே ரன்ல ஜெயிச்சிட்டாங்க... T20 ல இதுவரை இந்தியா அவங்களை ஜெயிச்சதே இல்லையாமே... ஆட்டம் முடிஞ்சதும் அற்புதமான ஓவரைப் போட்ட அந்த பவுலரை விக்கெட் கீப்பர் ஓடிவந்து தூக்கிட்டான் பார்த்தீங்களா?"

"பார்த்தேன்.. பார்த்தேன்... அவனை ஏன் தூக்கினான்னுதான் புரியலை! தோனியை இல்லை தூக்கியிருக்கணும்? அவர்தானே ஆறு விக்கெட் கையில் இருந்தாலும் அவங்களுக்காகப் பாடுபட்டார்?"

"கோஹ்லி கலக்கிட்டார் இல்லை?" 

"என் உழைப்பெல்லாம் பாழாப் போச்சே...."

"ஆமாம், அது மட்டுமில்லாமல் கடைசி ஓவர்கள்ள ஆட்டம் போற போக்கைப்பார்த்து கலங்கவும் கலங்கிட்டார்.. அதுவும் பார்த்தேன்... இருங்க ஃபோன் வருது..."

"ஹலோ..... ஆமாம்... ஆமாம்... சொல்லுங்க... அடடா.... ஓ... அட இதாங்க சென்னை ரசிகர்ங்க்றது.... இந்தியர்கள் எப்பவுமே உணர்ச்சிவசப்பட்டவங்கதான்... ஓகே ஓகே..."

"என்னங்க சிரிக்கறீங்க.. யார் ஃபோன்ல? என்ன விஷயம்?"

"மாமா பேசினார். அவங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டுல ஒரு நாய் இருந்தது  நம்ம சென்னை ரசிகர் இல்லையா... அன்பா தோனின்னு பேர் வச்சிருந்தார். ராத்திரி கேம் முடிஞ்சவுடன் வீட்டைப் பூட்ட வெளியில் வந்து பார்த்திருக்கார் மாமா. எதிர் வீட்டுக்காரர் அந்த நாயை வெளியில தள்ளிக் கதவைச் சாத்திட்டாராம். அது என்னன்னே புரியாம கேட்டுக்குப் பக்கத்துல நின்னுகிட்டிருக்காம்..."

                                       

12 கருத்துகள்:

  1. //அவனை ஏன் தூக்கினான்னுதான் புரியலை! தோனியை இல்லை தூக்கியிருக்கணும்?//

    :))

    பதிலளிநீக்கு
  2. //
    "என்னது.... இருபது ஓவர் மேட்சா... ? ஆட்டம் ஓவரா...! ஐம்பது ஓவர் மேட்ச்னு நினைச்சு இல்லே நின்னு விளையாடினேன்..." // ஹா ஹா ஹா அருமை

    நான் கிரிக்கெட் பார்பத விட்டு ரொம்ப நாள் ஆச்சு சார்

    பதிலளிநீக்கு
  3. ஒண்ணைப் பார்த்தை உள்வாங்கிண்டு அந்த சங்கதிகளோடு தன் உணர்வுகளையும் குழைச்சுக் கொடுத்து பார்க்காதவங்களுக்கும் தன்னை மாதிரியே பார்த்த உணர்வை ஏற்படுத்தணும்ன்னா, அதுக்குப் பேர்.. பேர் என்னவேணா, இருக்கட்டும்ங்க.. அதா முக்கியம், முதல்லே கைகொடுங்க..

    அங்கங்கே தென்பட்ட படங்களும் அதற்கான பங்களிப்பைச் செய்து இருப்பதையும் சொல்லாமல் விட்டால் குறையாகத் தெரியும்.
    குறிப்பா, அந்தக் கடைசிப் படத்தில்
    கதவு சாத்தியிருக்க, சாத்தியிருக்கும் கதவு திறக்கக் காத்திருக்கும் அந்த மரக்கலர் ஜீவன்.. மனசை என்னவோ செஞ்சது!..

    பதிலளிநீக்கு
  4. அதனால்தான் நான் மேட்ச் பார்க்கவில்லை! தோனி டி20யில் இப்போதெல்லாம் இப்படித்தான் சொதப்புகிறார்!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html

    பதிலளிநீக்கு
  5. க்ரிக்கெட்டில் இண்ட்ரெஸ்ட் போய் நாளாச்சு. ஆனா தோனி பாவம்! கதவுக்கு வெளியே நிற்கிறவரைச் சொன்னேன்:)!

    பதிலளிநீக்கு
  6. கிரிகெட்டை ரொம்பவே மிஸ் பண்றன்.. கலாய்சிட்டிங்கலே

    பதிலளிநீக்கு
  7. என்ன அநியாயம் இது.அந்த வாயில்லா ஜீவன் என்ன செய்திச்சு.அது கேட்டா நீங்க ‘தோனி’ன்னு பேர் வச்சீங்க.கண்டிப்பா மன்னிப்புக் கேக்கச்சொல்லுங்க அந்த நாயார்கிட்ட !

    பதிலளிநீக்கு
  8. தோனி மேல தப்பில்ல.. பிட்ச் ஸ்லோ அவ்ளோ ரன் குடுத்த பவுலர்ச என்ன சொல்ல

    பதிலளிநீக்கு
  9. ம்ம்ம். செம நக்கல்...

    இன்னும் ஸ்ரீலங்கா போய் என்ன பண்ணுவாங்க பார்ப்போம்...

    பதிலளிநீக்கு

  10. "என்னது.... இருபது ஓவர் மேட்சா... ? ஆட்டம் ஓவரா...! ஐம்பது ஓவர் மேட்ச்னு நினைச்சு இல்லே நின்னு விளையாடினேன்..//

    ஹிஹிஹிஹி, கலக்கல்.

    பாவம் அந்தச் செல்லம். அதுக்கு என்ன தெரியும் தன் பெயர் தோனினு. முதல்லே பெயரை மாத்தச் சொல்லுங்க. பாவமா உக்காந்திருக்கு. :((((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!