வியாழன், 30 செப்டம்பர், 2010

எந்திரன் - திரைத்துறை தீபாவளி!


அக்டோபர் ஒன்று....  'சிவாஜி'யின் பிறந்தநாள். அந்த நாளில், 'சிவாஜி' ராவ் நடித்த 'சிவாஜி' படத்தின் அடுத்த படமாகிய, 'எந்திரன்' திரைக்கு வருகின்றது! திரையுலகினர், தமிழக பொதுமக்களில் பெருஜனம், இங்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும், ஜப்பானிலும், இன்னும் வெளி நாட்டிலும் கூட 'அட, என்னதான் ஆகும்' என்று பார்த்துக் கொண்டிருக்கும் நாள்.

நாம் கொண்டாடாவிட்டாலும், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு விழாவை கொண்டாடும்போது, நாம் ஆர்வமாக கவனிப்பதில்லையா...அது போல சிலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  

லேசான, பலத்த, மிக பலத்த பொறாமையுடன் சிலர் நடக்கும் கூத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரெஹ்மான் போன்ற மூன்று பெரும்புள்ளிகளுடன் விளம்பரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலக்கும் சன் பிக்சர்ஸ் இணைந்தால் பிரம்மாண்டத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் கேட்க வேண்டுமா என்ன?

சுஜாதாவின் கதை.  அவர் இருந்திருந்தால் என்னென்ன சொல்லியிருப்பாரோ? இன்னும் என்னென்ன அவர் பாணியில் மெருகேற்றியிருப்பாரோ? 

சல்மான்கான் (ஷாருக்?) நடிப்பதாக இருந்து, பின்னர் கமல் கைக்கு வந்து, முடிவாக ரஜினி நடித்திருக்கிறார். 

முதன் முதலாக விஞ்ஞானியாக நடிக்கும் ரஜினிக்கு முதல் முறை ஜோடி சேரும் ஐஸ்வர்யா சம்பளம், இந்திய திரையுலக கதாநாயகிகள் வரலாற்றில் முதல் முறை ஆறு கோடியாம். 

சென்னையில் மட்டும் நாற்பது திரை அரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், தமிழகம் முழுவதும் ஐநூறு அரங்குகளில் வெளியாவது சாதனை. அது முறியடிப்பது முந்தைய ரஜினி படமான சிவாஜியின் சாதனையை..!   

மும்பை ஆரோரா திரை அரங்கம் ஆறேழு நாட்களாய் திரையரங்கை மூடி வைத்து, இந்தப் படத்துக்கு என்று ஸ்பெஷலாகத் தயாராகிறதாம்.

ரஜினிக்கு ஜப்பான் ரசிகர்கள் ஏராளம் என்பது தெரிந்ததே! நேபாளிலிருந்து ஒரு ரசிகர் இவர் படம் வெளியாகும் முதல் நாளே பார்க்க என்று சென்னை வந்துள்ளாராம்! 

எந்திரன் பற்றி எழுதாத பத்திரிகைகள், ப்ளாக்ஸ்,  காட்டாத சேனல்கள் குறைவு.  அதிகமாக விலை போகக் கூடிய இப்போதைய பொதுப்போக்கு எந்திரன் பற்றிய செய்திகள். 

சன் பிக்சர்ஸ் படம் என்ற போதும் எல்லா சேனல்களிலும் பிட்டு பிட்டாய் டிரெயிலர்கள் காண்பிக்கப் படுகின்றன.  

டிரெயிலருக்கே டிரெயிலர்,  முன் பதிவுக்கு முன்னோட்டம், முன் பதிவை டிவியில் காண்பிப்பது என்று ஒன்றொன்றும் ஆர்ப்பாட்டமாகச் செய்வது இதன் பிரம்மாண்டத்தைப் பறை சாற்ற!

தமிழக அரசு இதன் வெளியிடு நாளுக்கு விடுமுறை விடாதது ஒன்றுதான் குறை!  (விடுமுறையும் வேறு வகையில் வந்துவிட்டதோ?) முன்பதிவு ஆரம்பித்த முதல் சில மணிநேரங்களிலேயே, முதல் மூன்று வாரங்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டதாக சேனல்கள் சொல்கின்றன.

கன்னியாகுமரியில் தொடங்கி அக்டோபர் ஒன்றாம் தேதி சென்னையில் முடியும் வண்ணம் எந்திரன் பற்றி ஒரு ரத யாத்திரை நடந்து வருவதை ஆங்கில சேனல் ஒன்று காட்டியது.  கூடவே அமிதாப் தன் 'அருமை நண்பர்' ரஜினி பற்றி சிலாகித்துச் சொல்வதையும், நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் தென் இந்தியக் காலாச்சாரம் பற்றி பேசியதையும் கேட்க முடிந்தது.

கீழே பசித்த புலி என்று பயந்து மரத்தில் ஏறினால், மரக் கிளையில் மலைப் பாம்பு, பயந்து பக்கத்தில் தண்ணீரில் குதிக்கலாம் என்றால் முதலை என்ற நிலையில் மேலே உள்ள தேன் கூட்டிலிருந்து கசிந்த ஒரு துளி தேனை நாக்கில் சுவைத்த மனிதன், 'ஆஹா! என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ...  
   

19 கருத்துகள்:

  1. enthiran patthi nalla pathivu ippathan paakaren. sanikilamai show poren vanthu review potralam

    பதிலளிநீக்கு
  2. 'ஆஹா! என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... ///

    பார்ப்போம். அக் 1 தேதி எல்லாம் தெரிஞ்சிடும்.

    பதிலளிநீக்கு
  3. //'ஆஹா! என்ன ருசி'//

    அமாம்.. 'ஆசைதான் அழிவிற்கு காரணம்'.
    எதில் உண்மையான 'சுகம்', 'மகிழ்ச்சி' இருக்கிறது என்பதை அறியாமல் பலர் வாழ்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  4. //பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //

    ஆமாம்!! ஒருவேளை, எந்திரன் ரிலீஸால் இந்து-முஸ்லிம் ஒற்றுமைகூடப் பலப்படலாம், யார் கண்டது!! :-))))

    பதிலளிநீக்கு
  5. //பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //

    அது தேனா இல்லை ?????????
    பார்போம்


    காஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ?
    http://cyberbuddies.blogspot.com/2010/09/rajini-great-ad-castrol-advertisement.html

    பதிலளிநீக்கு
  6. //கீழே பசித்த புலி என்று பயந்து மரத்தில் ஏறினால், மரக் கிளையில் மலைப் பாம்பு, பயந்து பக்கத்தில் தண்ணீரில் குதிக்கலாம் என்றால் முதலை என்ற நிலையில் மேலே உள்ள தேன் கூட்டிலிருந்து கசிந்த ஒரு துளி தேனை நாக்கில் சுவைத்த மனிதன், 'ஆஹா! என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //என்னதான் இருந்தாலும் இது உமக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? சிவாஜி படத்தில் கதை என்று பார்த்தால் ஆயிரம் முறை தமிழ் படவுலகும், எட்டு முறை ஷங்கரும் அரைச்ச அதே மாவுதானே. Robot படத்துக்கு ஓவர் பில்ட் அப் குடுத்துகிட்டு இருக்காங்க, ஆனாலும் செலவு அதிகம் செய்யாமல் எந்த சப்தமும்/ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எந்த புயல், ஸ்டார் யாரும் இல்லாமல் வந்த களவாணி, அங்காடித் தெரு போன்ற படங்கள் மக்களின் மனதை கொள்ளையடித்துச் சென்றன. இந்தப் படம் அந்த அளவுக்காவது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுமா? எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ரஜனிபடம் பிடிக்காதுன்னு சொன்னாலும்....அவர்ல ஏதோ ஒரு கவர்ச்சி.படம் பார்த்தே ஆகணும்.

    பதிலளிநீக்கு
  8. இன்னுமா இந்தப்படம் ரிலீஸ் ஆவல? புலி வருது புலி வருது புலி வருது...

    பதிலளிநீக்கு
  9. படம் சகிக்காது. (ட்ரெயிலர் பார்த்தேன்.. காபி அடித்தாலும் ரசிக்கும்படியாக காபி அடிக்க வேண்டாமோ? யக்!)
    ஆனால் எக்கச்சக்கமா பணம் குவிக்கும் (ரஜினி சங்கர் தலைவிதி அப்படி; ஜனங்க தலைவிதி இப்படி)
    இந்தப் படத்தோட ரிடையர் ஆவாரா சூப்பரு? மாட்டாரு.
    தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் இந்தப் படம்னாராமே சூப்பரு? தோடா..

    பதிலளிநீக்கு
  10. ///முதன் முதலாக விஞ்ஞானியாக நடிக்கும் ரஜினிக்கு...

    this too shall pass.

    பதிலளிநீக்கு
  11. நான் முதல் நாள் தளபதிக்கு அப்புறம் இப்போதோ தான் ரஜினி படம். பார்ப்போம் !! சிலபேருக்கு அங்கே மச்சம் என்பார்கள் - ரஜினிக்கு உடம்பே கருப்பு - அப்புறம் மச்சம் பற்றி கேட்கவேண்டும். நானும்தான் கட்டக்கருப்பு, ஒரு மறுதலாக்காவது ஏதோ கொஞ்சம் நல்லது நடக்கலாம். அட போங்கையா

    பதிலளிநீக்கு
  12. எங்க ஊர்ல எப்ப ரிலீஸ்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க... ம்ம்ம்... சூப்பர் ஹிட் தான் நோ டவுட்... ஆனா கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமா create பண்ணிட்டாங்களோனு தோணுது...

    பதிலளிநீக்கு
  13. // ஹுஸைனம்மா said... ஆமாம்!! ஒருவேளை, எந்திரன் ரிலீஸால் இந்து-முஸ்லிம் ஒற்றுமைகூடப் பலப்படலாம், யார் கண்டது!! :-)))) //


    அது நடக்குமோ ? அதுவும் - நம்மை ஊராய விட்டு வேடிக்கை பார்ப்பது அரசியல்வாதிகள் முதல் / ஆன்மிகவாதிகள் வரை என்று இருக்கும்போது

    "பாப்ரி மஜீத்" நிகழ்வு நடந்தபோது நான் பெங்களூரில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என்னுடன் வேலை பார்த்த "முஹமத் சுஹைல்" என்ற அலுவலக நண்பரை ஒரு நாள் போல் நான் வசித்த கிழக்கு பெங்களுரிலிருந்து Bull Temple ரோட்டில் இருந்த என் அலுவலகத்துக்கு அழைத்து செல்வேன். அவருக்கு வண்டி ஓட்ட தெரியாது. மேலே சொன்ன விஷயம் நடந்து அவர் வசித்த Fraser Town ஏரியா ஒரே களேபரம். அவரை எந்த ஒரு பிரச்சினையும் இன்றி அழைத்து போனது நேற்று கோர்ட் நியூஸ் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.

    இப்போது உங்கள் கருத்து.

    சிவாஜி கணேசன் அவர்களின் பாவ மன்னிப்பு பட பாடலில் வருவது போல்

    "எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
    பாயும் மீன்களில் படகினை படைத்தான்
    எதனை கண்டான் "மதம்" தனை படைத்தான் !!"

    கண்ணதாசனின் இந்த வரிகளை கூட ஒத்துக்கொள்ளாத உலகம் "மனம்" தனை படைத்தான் என்று மாற்றி வைத்தது !!

    - சாய்

    பதிலளிநீக்கு
  14. "எந்திரன்" சூப்பர் என்று விமர்சனங்கள் குவிகின்றன. கூட்டம் அடங்கிய பின் நிச்சயம் பார்த்துவிட எண்ணியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  15. முதல் நாள் முதல் ஷோ இல்லாவிட்டாலும் நேற்று பார்த்தாகிவிட்டது. முழுக்க முழுக்க ஷங்கர் படம். ரோபோ ரஜினி கலக்கல். ரொம்ப நாளுக்கு பின் வில்லன் போல் ! அதுவும் 'மேம்மே" கத்திக்கொண்டு வரும்போது அந்தக்கால வில்லன் ரஜினியை தொலைத்துவிட்டோமோ என்று வருத்தம்.

    ஆடு புலி ஆட்டம், மூன்று முடிச்சு - ரஜினி என்னிடம் நல்ல கதை இருக்கு உங்களை வில்லனாக பரிணமிக்க !!!

    நான் ரெடி நீங்கள் ரெடியா !!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!